நம்முடைய தலைவர்கள் நம்மைச் சீரழித்தார்கள், நாம் அவர்களைச் சீரழித்தோம்!
இந்தியா முழுவதும் எல்லாத் தொலைக்காட்சிகளும் வெவ்வேறு மொழிகளில், தங்களுக்கு வசதியான தொனியில் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. “இந்திய வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் பதவியில் இருக்கும்போதே நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, பதவியைப் பறிகொடுத்தார் ஜெயலலிதா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை. தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தண்டனையைத் தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை தொடரும் என்பதால், 10 ஆண்டுகள் அவர் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்.”
சிரிப்புதான் வருகிறது. போன வருஷம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், பிஹாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தண்டனையோடு சிறைக்குச் சென்றார். ஞாபகம் இருக்கிறதா? 17 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுக்க முடியுமோ அப்படியெல்லாம் வழக்கை இழுத்தடித்தார். இடையிலேயே மனைவி ராப்ரி தேவியை முதல்வர் ஆக்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ரயில்வே அமைச்சர் ஆனார். சிறைக்குப் போனார். இப்போது என்ன செய்கிறார்? வழக்கு மேல் விசாரணையில் இருக்கிறது. பிணையில் வெளியே வந்த லாலு, பாட்னாவில் தன் வீட்டுக் கொல்லையில், ரம்மியமான சூழலில், எதிரே கிடக்கும் மேஜையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, அப்போதைக்கு அப்போது கறந்த எருமைப் பாலில் மலாய் தூத் குடித்துக்கொண்டு பிஹார் அரசியலைத் தீர்மானிக்கிறார். சமீபத்திய தேர்தலில் மக்கள் லாலுவின் கரத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள்.
பிஹார் கதை போகட்டும், நம்மூருக்கு வருவோம். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்று அறிவித்ததன் மூலம், 1991-1996 அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது, சரி. 1996 - 2001 திமுக ஆட்சியின் கதை என்ன? 2001-2006 அதிமுக ஆட்சியின் கதை என்ன? 2006-2011 திமுக ஆட்சியின் கதை என்ன? இப்போது 2011-2014 ஆட்சியின் கதை என்ன? நம் எல்லோருக்கும் தெரியும்!
கட்சிக்காரர்களுக்கு ஊழல் தெரியாதா?
ஒரு சகா கேட்டார்: “ஆட்சியில் உள்ள ஒரு முதல்வரை ஊழலில் ஈடுபட்டார் என்று சொல்லி நீதிமன்றம் தண்டிக்கிறது. அவருடைய கட்சியினர் குற்றம்பற்றி துளி யோசிக்கவில்லை. தீர்ப்பை எதிர்த்து வன்முறையில் ஈடுபடு கிறார்கள். அதிமுகவினருக்கு யோசிக்கவே தெரியாதா?”
ஆ. ராசா அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுப் பிறகு பிணையில் வெளியே வந்தபோது பிரம்மாண்டமான வரவேற்பு அளித்ததே திமுக; அப்படியென்றால், திமுகவினருக்கு யோசிக்கவே தெரியாது என்று தீர்மானிக்க முடியுமா?
கட்சி வரையறைகளையெல்லாம் தாண்டி யோசிக்க வேண்டிய விவகாரம் இது. தமிழ்நாட்டில் திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனை என்று கேளுங்கள். ஒரு கோடிக்குப் பக்கமாகச் சொல்வார்கள். அதிமுகவினர் எண்ணிக்கை கோடியைத் தாண்டிச் சொல்வார்கள். மிகை அல்ல. ஒட்டுமொத்தத் தமிழகத்தில் ஏழில் மூவர் அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் என்றால், அவர்களில் இருவர் திமுக அல்லது அதிமுக அபிமானிகள். மிச்சமுள்ள ஒருவர் தேமுதிகவையோ, காங்கிரஸையோ, பாமகவையோ, மதிமுகவையோ, கம்யூனிஸ்ட் கட்சியையோ, ஏனைய கட்சிகளையோ சேர்ந்தவராக இருக்கலாம். இவர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் பேசுவதில் அர்த்தமில்லை.
தங்களுடைய கட்சித் தலைமை ஊழலுக்கு அப்பாற்பட்டது என்று இவர்கள் எவரும் நம்பவில்லை. இதில் ஒளித்து மறைக்க ஒன்றும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் கட்சி நடத்த தங்கள் உறுப்பினர்களின் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட பகுதியைப் பெறுகிறார்கள்; மாநாடுகள், தேர்தல்களை எதிர்கொள்ள உண்டியல் குலுக்குகிறார்கள். எல்லோருக்கும் தெரியும். ஏனைய கட்சிகள் கோடி கோடியாக இறைக்க எங்கிருந்து வருகிறது பணம்? ‘மக்கள் சேவை’யை மட்டுமே ஒரே வேலையாகக் கொண்டிருக்கும் நம்முடைய அரசியல் தலைவர்கள் குடும்பம் நடத்த எங்கிருந்து வருகிறது பணம்? இந்தப் ‘பணப்புழக்கப் பாதை’ வெளியில் உள்ளவர்களைவிடவும் கட்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், ஊழலையெல்லாம் தாண்டியும் இவர்களுக்குக் கட்சித் தலைவர்களே முக்கியமானவர்கள். ஏன்? ஊழல் நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கம் ஆகிவிட்டது. ஆம், இங்கே அதிமுகவினர், திமுகவினர், மக்கள் என்கிற வார்த்தைகள் எல்லாம்கூட பூடகமானவை. அடிப்படையில் இவர்கள் எல்லாம் யார்? உடைத்துப்பார்த்தால் எல்லாம் நாம்தான்!
திருமங்கலம், புதுக்கோட்டைச் சூத்திரங்கள்
போன ஆட்சியில் நடந்த திருமங்கலம் தேர்தல் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், மூக்குத்தி, மோதிரமும் போனதை உலகமே பார்த்தது. தேர்தல் முடிவு என்ன? திமுக அபார வெற்றி! திருமங்கலம் சூத்திரம் என்றே தேர்தலில் ஒரு உத்தி உருவானது. தேர்தலில் பாய்ந்தது ஊழல் பணம் என்பது மக்களுக்குத் தெரியாதா? மக்கள் உணர்த்திய பாடம் என்ன? இதோ, இந்த ஆட்சியில் புதுக்கோட்டை சூத்திரம் உருவாகியிருக்கிறது. “ஆளுங்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் மிரட்டப்படுகிறார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படுகிறார்கள்; ஜனநாயகப் படுகொலை நடக்கிறது” என்று எதிர்க்கட்சிகள் அத்தனையும் கூக்குரலிட்டன. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். தேர்தல் முடிவு என்ன? அதிமுகவுக்கு அமோக வெற்றி! மக்கள் உணர்த்தும் பாடம் என்ன?
காலாவதியாகும் நேர்மை
நேர்மையான ஆட்சிக்கு உதாரணமாக காமராஜர் ஆட்சியைப் பற்றியும் எளிமையான அரசியல்வாதிக்கு உதாரணமாகக் கக்கனைப் பற்றியும் பேசிக்கொண்டிருக் கிறோம் இன்னமும். இடைப்பட்ட இந்த 50 ஆண்டுகளில் நேர்மையான, எளிமையான ஒரு அரசியல்வாதிகூட நமக்குக் கிடைக்கவில்லையா? கண்ணெதிரே உள்ள சாட்சியம் நல்லகண்ணு. இந்திய அளவில் கொண்டாடத்தக்க அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளில் ஒருவர். இன்றைக்கும் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஆட்டோவில் வந்திறங்கும் மனிதர். வாழ்நாள் பணியைப் பாராட்டி அளிக்கப்பட்ட நிதியைக்கூட “மனைவிக்கு ஓய்வூதியம் வருகிறது, எனக்கு என்ன செலவு?” என்று கேட்டு கட்சியிடம் நிதியை ஒப்படைத்தவர். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் பரப்பில் ஒரு நல்லகண்ணுவுக்கான இடம் என்ன?
எதற்கெடுத்தாலும் அமைப்பு மோசம் என்று கூப்பாடு போடுவதில் அர்த்தம் இல்லை. இதே அமைப்பில்தான் ஒரு காமராஜரும் கக்கனும் நல்லகண்ணுவும் உழன்றிருக் கிறார்கள். அன்றைக்கு காமராஜர்களும் கக்கன்களும் எடுபட்டார்கள்; இன்றைக்கு நல்லகண்ணுகள் தேவையற்றவர் களாகிவிட்டார்கள் என்றால், தவறு அரசியல்வாதிகளிடம் மட்டும்தான் இருக்கிறதா?
அரசியலில் காலடி எடுத்துவைத்த நாளில், இப்படியெல் லாம் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமக்கும் ஒரு கட்சியை நடத்துவோம் என்று கருணாநிதிதான் நினைத்திருப்பாரா, ஊழல் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்படுவோம் என்று ஜெயலலிதாதான் நினைத்திருப்பாரா? அவர்கள் நம்மையும் நாம் அவர்களையுமாகச் சீரழித்துக்கொண்டோம். அவர்களுடைய பிழைகள், தவறுகளாகி, குற்றங்களாக உருவெடுத்து அவர்களையும் அழித்து, நாட்டையும் சிதைக்க நாம்தான் வழிவகுத்தோம்.
நாம் எந்த அளவுக்கு நேர்மையாளர்கள்?
நேர்மை வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. வாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையோடும் பிணைந்தது. நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்த நாளின் இரவு. கலவரச் சூழலில், அரைகுறை வெளிச்சத்தில் அழுது வடியும் தெருக்களில் பசியால் அழும் குழந்தைக்கு பால் பாக்கெட் வாங்க அலைந்து கொண்டிருக்கிறார் ஒருவர். அங்கொன்றும் இங்கொன்றுமாக கால்வாசி கதவைத் திறந்துவைத்து வியாபாரம் நடத்தும் கடைக்காரர் வழக்கமாக ரூ. 14-க்கு விற்கும் பால் பாக்கெட்டை ரூ. 20-க்கு விற்கிறார். மருத்துவமனை வாசலிலேயே வெகு நேரம் காத்திருந்து, அரிதாக வரும் ஒரு ஆட்டோவில் ஏற முற்படும் மூதாட்டியிடம் ரூ. 30-க்குச் செல்லும் சவாரிக்கு ரூ. 100 கேட்கிறார் ஆட்டோக்காரர். மூன்று வீடுகளின் உரிமையாளர் தன் வீட்டில் இருக்கும் - ஏழைகளுக்கு அரசாங்கம் கொடுத்த இலவச - தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்துவிட்டு, “இந்த அரசியல்வாதிகளெல்லாம் மோசம்பா” என்கிறார்...
நீதிபதி குன்ஹா அவர்களே... உங்களைப் போன்றவர்கள் அறத்தை உரக்கப் பேசும்போதுதான் எங்களுக்குள் இருக்கும் மனசாட்சிக்குக் கொஞ்சமேனும் உறைக்கிறது. அறம் கொன்ற குற்றத்தில் எங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. எங்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்போகிறீர்கள்?
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
thanx - the hindu
- Prithika Sivaramanஎச்செல்லேன்ட் அர்டிச்லே !!!36 minutes ago · (2) · (0) · reply (0) ·Prithika-Sivaraman Up Voted
- Jahangeer Sநால்வரில் நல்லவர் யார் என்று எப்போது தெரியும்?about an hour ago · (1) · (0) · reply (0) ·
- N.Swaminathanமுன்பு எல்லாம் ஊழல் ஊறுகாய் அளவுக்கு இருந்தது ஆனால் இப்போது ஊழல் பெருகி மக்களுக்கு கிடைக்கும் உதவி இல்லாமல் போய் விட்டது . எங்கும் ஊழல் எதிலும் ஊழல் வாழ்க நம் ஜனநாயகம் வேதனை நினைத்தால் இரவில் உறக்கம் வருவது இல்லைabout an hour ago · (2) · (0) · reply (0) ·
Murali Gopal
கீழ்கோர்ட்டில் ஒருவர் தண்டிக்கப்படுகிறார்--உயர்நீதிமன்றத்திலோ-உச்சநீதிமன்றத்திலோ அப்பில் செய்து விடுதலை ஆகிறார்--இடைகாலத்தில்-சிறையில் இருப்பது-அவர் குடும்பம் நாசமாவது--அவருடைய நற்பெயருக்கு களங்கம்---இதற்கு யார் பொறுப்பு--நீதியின் அளவு கோல் எது??? நீதிமன்றங்களும் மக்கள் வரி பணத்தில்தான் இயங்குகின்றன---நீதி காலதாமதமாவதற்கு தண்டிக்க படவேண்டியவர்கள் யார்???----குழல்about an hour ago · (0) · (0) · reply (0) ·Points1495- கதிரவன்அடபோங்க பா..நீங்க என்ன சொன்னாலும் உறைக்காது மக்களுக்கு என்று சுயநலம், ஆடம்பரத்தை விரும்புதல், பணத்துக்கு அடிமை ஆதல், தனக்கு என்றால் எதுவும் தவறில்லை என்ற போக்கு, விதிகளை மீறுதல், நேர்மை என்பது கேவலமாக பார்க்கப்படுதல் போன்ற எண்ணம் மாறுகிறதோ அன்று தான் நல்ல தலைவர்களும் கிடைப்பார்கள்...அது வரைக்கும் உங்கள போல என்ன போல பொலம்ப வேண்டிதா... உண்மை கசக்கதான் செய்யும் மக்களே..இல்லன்னா கொள்ள அடிச்சி சிறைக்கு உள்ள போரவங்கள ஆதரித்து போராடுவீங்களா?..இது எல்லா கட்சி மற்றும் ஜாதி அமைப்புகளுக்கும் பொருந்தும்..நா விழிச்சிக்கிட்ட நீங்க?நன்றி..about an hour ago · (1) · (0) · reply (0) ·
- Syed Abdaheerதீர்ப்பு வெளி வந்த பின்பு தமிழகம் அசாதாரண சூழ் நிலைக்கு தள்ளபட்டிருகிறது . இன்று திரை உலகமும் உண்ணாவிரத்தில் குதித்து இருக்கிறது . எந்த ஒரு மிரட்டலுக்கும் , அச்சுறுத்தலுக்கும் நீதி தலை வணங்காது என்பதை அறியாமல் பொது மக்களுக்கு இடையூறு அளிப்பது எந்த விதத்தில் நியாயம் ??? நீதி தனக்கு முன்பு நிற்பவர் யார் என்று பார்ப்பதில்லை . தீர்ப்பில் ஆட்சேபம் இருந்தால் முறையிட வேண்டியது மேல் நீதி மன்றங்களைத்தான் . நாட்டில் ஜனநாயகம் பாதுக்கக்கபடுவது நீதி மன்றங்களால்தான் . அதன் வேர்களில் வெந்நீர் ஊற்றாதிர்கள்about an hour ago · (2) · (0) · reply (0) ·
Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited
'கண்ண'த்தில் பளார் என்று அடிவாங்கினமாதிரி இருந்தது, படித்து முடித்தவுடன்!! அப்பா நல்லா போட்டு தாக்கிட்டார் மனசாட்சியை!!about an hour ago · (14) · (0) · reply (0) ·Points8960Micheal-Johnson Up Voted- விவேக்குமார்சரி தான் சார். அந்த தீர்ப்பு வந்த நாளில் பாதிக்கப்பட்டவன் நானும் தான். ஒரு வேளை விஷயமாக குமுளிக்கு சென்று திரும்பும் போது பேருந்து கிடைக்காமல் காய்கறி ஏற்றும் வாகனத்தில் ரூ. 200 கொடுத்து வீடு வந்து சேர்ந்தேன்.about an hour ago · (3) · (0) · reply (0) ·
- sasibalanஅரசு தரும் இலவசங்கள் அல்லது ரூ.200/ ஐ அன்பளிப்பாக வாங்கி கொண்டு வாக்களிக்கும் நாம் ,சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் அரசியல்வாதிகள் ஆகிய அனைவருமே அறம் கொன்றவர்களே.அறம் கொன்ற குற்றத்தில் எங்களுக்கும் முக்கிய பங்குண்டு. எங்களுக்கு என்ன தண்டனை தரப் போகிறீர்கள் குன்ஹா ? கட்டுரையாளரின் ஆணித்தரமான சவுக்கடி கேள்வி இது.தவறு அரசியல்வாதிகளிடம் மட்டும் இல்லை.அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களிடமும் உள்ளது என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.about an hour ago · (12) · (0) · reply (0) ·Points1385
- meyyaruviஇப்போதைய மக்கள் நல்லவர்களை விரும்பவில்லை மாறாக நன்றாக ஆளும் திறன் கொண்டோரை மட்டுமே விரும்புகின்றனர் உண்மையிலேயே ஜெயலலிதாவின் தனிப்பட்ட விஷயத்தை தவிர்த்து பார்த்தால் சிறப்பான ஆளும் திறன் கொண்டவராகவே திகழ்கிறார் மக்கள் இலவசங்களுக்கு ஆசை பட்டு ஒட்டு அளிக்கும் வரையில் இவர்களை திருத்தவே முடியாது மக்கள் than thalaivargalai thernthedukkiraargal மக்கள் viruppappadi அவர்களும் நடக்கிறார்கள் மக்கள் thirunthinal than ivargalum thirunthuvargalabout an hour ago · (0) · (5) · reply (0) ·Points185
- P.S.Murthy,த்ப்குதி அற்றவனுக்கு வசதி வந்துவிட்டால் சமுதாயம் சீரழியும். "இனி ஒட்டு வங்கி அரசியல் இந்தியாவில் இருக்காது" என்று பிரதமர் கூறி இருக்கிறார். இதை உள்வாங்கி உணர்துகொண்டாலெ போதும், இந்த நாடு உருப்பட்டுவிடும். செயலைப்பார்த்து பொருள் கொள்ளாது சொன்னவரைப்பார்த்து பொருள் கொள்ளும் நாடாகிவிட்டது நம் நாடு. எளியோரின் வளர்சிக்கான சலுகைகள் உரிமைகளாக மாறின. இந்த சந்தர்ப்ப வாதம் மக்களின் மனதை சாக்கடை ஆக்கிவிட்டது. சலுகைகளை நீக்குங்கள் திறமையின் அடிப்படையில் அனைத்தும் பெறப்படவேண்டும் சாதி மதம் இவற்றை நிர்ணயம் செய்யக்கூடாது. வரி செலுத்துவோருக்கு மட்டும் ஓட்டுரிமை. 25 வயதுக்குமேல் ஓட்டுரிமை என மாற்றங்கள் வரவேண்டும். அப்போதுதான் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒழுக்கமுள்ளவராக இருக்கமுடியும். எலும்புதுண்டிற்கு இரையாகும் மாக்கள் ஓட்டளிக்கும் வரை நல்ல அரசியல் மற்றும் சமுதாயம் மலராது. சமுதாய மாற்றம் மிக சிக்கலானது மாற்றாக சீரழிக்கும் தலைகளை ஓரம் கட்டினாலே சமுதாயமாற்றம் விரைவாக வசப்படும்.about an hour ago · (0) · (1) · reply (1) ·Points205
- sibiசரியாக சொன்னீர். வரி செலுத்துவோருக்கு மட்டும் ஓட்டுரிமை. 25 வயதுக்குமேல் ஓட்டுரிமை என மாற்றங்கள் வரவேண்டும். அப்போதுதான் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒழுக்கமுள்ளவராக இருக்கமுடியும். எலும்புதுண்டிற்கு இரையாகும் மாக்கள் ஓட்டளிக்கும் வரை நல்ல அரசியல் மற்றும் சமுதாயம் மலராது. சமுதாய மாற்றம் மிக சிக்கலானது மாற்றாக சீரழிக்கும் தலைகளை ஓரம் கட்டினாலே சமுதாயமாற்றம் விரைவாக வசப்படும்.about an hour ago · (0) · (1) · reply (0) ·
- ஸ்ரீபாலாஜிதீர்ப்பை மதிக்காமல் அரசியல் தலைவர்களின் ஏவலுக்கு அடிபணியும் அடிமைகள் இருக்கும் வரை ஒரு அரசியல் தெளிவு பிறக்காது ? நம்மை அந்த அரசியல் வாதிகள் தெளிய விடமாட்டார்கள் ? கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பததை தான் அவர்கள் விரும்புவார்கள் ?இதே போல் ஒவ்வொரு மாநிலமும் தனது மாநிலத்திற்கு எதிராக(முல்லை பெரியாறு ,காவேரி என்று ) வெளிவரும் தீர்ப்பை மதிக்காமல் இது போன்ற அட்டூழியங்களில் ஈடுபட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது ரஷ்யாவை போல் கேள்வி குறியாகிவிடும் என்பது மட்டும் உறுதி ...!? கடன் வாங்கி பற்றா குறை பட்ஜெட் போடும் இந்தியாவில் மக்களின் பணத்தில் மக்களுக்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும் மலிவையும் ,இலவசத்தையும் ,வோட்டுக்கு பணத்தையும் எதிபார்க்கும் மக்கள் இருக்கும்வரை ... ஒருமைப்பாடு தொடர்வது ...ஐயமே !about 2 hours ago · (2) · (0) · reply (0) ·Points2765
- கார்த்திக் கும்பகோணம்தலை குனிய வேண்டும் நாம் அனைவரும் 100%உண்மைabout 2 hours ago · (5) · (0) · reply (0) ·
- க.மகேந்திரன்உண்மை கட்டுரைக்கு. வரவேற்கிரேன் ஆனால் இன்று படித்த இளைஞர்கள் சாதியின். பெயரில் பிளவுபட்டு கிடக் கின்றற்கள் இவர்கள் ஒன்றுப்படும் ெபளூது ஊளள். இல்லதா இந்திய மலரும் . வாழ்த்துக்கள். ..
No comments:
Post a Comment