சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜரானார். ஃபாலி எஸ்.நாரிமன் சிறப்பாக வாதாடினார். ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி அவர் வாதாடினார்.
நாரிமன் வாதம்:
ஊழல் வழக்கில் ஒரு நபர் குற்றம் நிரூபிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு தண்டனையும் பெறப்பட்ட நிலையில் அவர் சார்பில் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை உச்ச நீதிமன்றம் சற்று தாராள கொள்கையுடன் அணுக வேண்டும்.
உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர் சந்தித்த பல்வேறு வழக்குகளில், தண்டனை கைதி மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு முடியும் வரை உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது. இதை கருத்தில் கொண்டே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என பவானி சிங் தெரிவித்தார்.
பவானி சிங் வாதத்தில் தவறேதும் இல்லை. ஆனால், அவர் ஏதோ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பேசப்பட்டது. எனவே, ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் ஜெயலலிதா வீட்டுக் காவலில் இருக்கவும் தயாராக இருக்கிறார்" என்று நாரிமான் வாதிட்டார்.
thanx - the hindu
- Natarajanகர்நாடக நீதிமன்றத்தில் ஜெயாவின் வழக்கறிஞர்கள் ஜெயாவை போலவே மிகவும் ஆணவத்தோடு உடனே ஜாமீன் வேண்டும், தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று வாதாடினார்கள், ஆனால் உச்சநீதி மன்றத்தில், எசமான் நீங்கள் எது சொன்னாலும் நாங்க ஏற்றுகொள்கிறோம் என்று மிகவும் பணிவாக நடந்து கொண்டார்கள், நல்லா இறுக்கமாக பிடித்து இறுக்கினால் தான் சரிவரும், நீதிபதிகளை ஜெயாவின் அமைச்சர்கள் என்று நினைத்து விட்டார்கள் போல.about an hour ago · (5) · (2) · reply (0) ·Points760
- venkatesanநீங்க உள்ள irundhaa என்ன? வெளிய irundhaa என்ன ? யார பத்தி எங்களுக்கு என்ன கவலை ?எங்களத்தான் சிந்திக்க விடாம குடி நோயாளியா ஆக்கிட்டிங்களே. எங்களின் தேவை எல்லாம் விடுமுறை விடாம டாஸ்மாக் இருக்கணும்.(பேருந்தில் பயணம் செய்யும்பொழுது இரு கல்லுரி மாணவர்கள் சத்தமாக பேசிக்ககொண்டது)about an hour ago · (3) · (1) · reply (0) ·Points410
- moorthyநீதிக்கே அக்னி பிரவேசம் ! சட்டம் படித்தவர்கள் தாம் தனது எதிர் தரப்பு வாதத்தை உடைக்க வேண்டும் என்று மட்டுமே படிக்கிறார்கள். நாடு, சமுதாயம் இவற்றின் நலன்களை மனதால் நினைத்துக் கூட பார்க்க மறுக்கிறார்கள். அதனால் தான் நம் நாடும், சமுதாயமும் இவ்வளவு கீழ்மை நிலைக்கு சென்றுள்ளது. இந்தமுறையும் அரசு அங்கீகாரம் பெற்ற கட்டப் பஞ்சாயத்து என்றே கொள்ளலாம்.இதில் வல்லரசு கனவு வேறு. அனைத்தும் வேதனைக்குரிய விஷயங்களாக உள்ளது.about an hour ago · (3) · (0) · reply (0) ·Points215
- tree"தண்டனை கைதி மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது." பல கேள்விகள் எழ்கின்றது இங்கே. 1. மேல் முறையீடு செய்ய இயலாதவர்களின் கதி என்ன ஆகும், அவர்கள் கதை முடிந்ததா? 2. மேல் முறையீட்டின் மூலம் தீர்ப்பு இவருக்கு சாதகமாக வருமே ஆயின், இவர் அனுபவித்த தண்டனைக்கு கோர்ட் compensation வழங்குமா இல்லை மன்னிப்பு கேட்குமா? 3. சு. சாமி மீது மான நஷ்ட வழக்கு தொடுக்க இயலுமா? 4. இவர் கடைசிவரை உடல் நிலை காரணமாக ஜாமீனில் இருக்கும் குற்றவாளி என்று கருதப்படுவாரா?about 2 hours ago · (13) · (0) · reply (0) ·Points6405
- SENTHILதொண்டர்கள் பாவம் வெடி வெடிக்கிறார்கள, அவர்களுக்கு இந்த வழக்கின் அபாயம் தெரியவில்லை. இப்போது சுப்ரிம் கோர்ட் தீர்ப்பினால் ஜெயலலிதாவிற்கு மேலும் சிக்கல்தான். 5 மாதத்தில் கர்நாடக ஹைகோர்ட்ல் கேஸ்ய் முடிக்கவேண்டும், வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது, வேரூ யாரையும் சந்திக்க கூடாது (டாக்டர்ஐ தவிர), இன்னும் பலகண்டிஷன்கல். தலை சுற்றுகிறது. இந்த மாதிரி கண்டிஷன் பெயில் தீர்ப்பு சுப்ரிம் கோர்ட்ல் வாங்கியதற்கு பேசாமல் ஜெயிலிலேயே இருந்து கர்நாடக ஹைகோர்ட்லேயே பெயில் அப்பிள் செய்து இருக்கலாம். அங்கு இந்த மாதிரி கண்டிஷன் போடப்படாது வக்கில், ஆடிடர் மற்றும் அல்லகைகள் எல்லோரும் சேர்ந்து ஜெயலலிதாவிற்கு மிகப்பெரிய துரோகம் செய்கிறார்கள். இதை ஜெயலலிதாவும் உணர்ந்தார்போல் தெரியவில்லை. இனிமேலாவது ஜெயலலிதா நேரடியாக இந்த வழக்கில் தலையிடவேண்டும் அப்போதாவது இந்த வழக்கில் இருந்து விடுபட முடியுமா என்று பார்க்கலாம். செந்தில்about 2 hours ago · (4) · (2) · reply (1) ·
- gurunathanஇப்போது ஜெயா விற்கு ஜாமீன் கிடைத்தது ஒரு வக்கீலால்தான் என்றால் தண்டனை கிடைத்தது கூட ஒரு வக்கீல்(பவானி சிங் )மூலம்தான் .எனவே தயவுசெய்து எவைரயும் விமர்சிக்கும் முன் சற்று கண்ணியம் தேவைabout 2 hours ago · (2) · (0) · reply (0) ·SUNDARARAMANM Up Voted
- SUNDARARAMAN.Mஅம்மா உள்ளே இருந்தால்தான் தங்களுக்கு எதிர்காலம் என்று இறுமாப்புடன் இருந்த எதிர்கட்சிகள் தலையில் இடி விழுந்துவிட்டது.about 2 hours ago · (33) · (10) · reply (0) ·Points100Krishnaswami Up VotedNatarajan Down Voted
Valluva Chelvan at Samsung Electronics
நன்றி .............ஆல்about 2 hours ago · (0) · (0) · reply (0) ·Points275- nithiyanandamநிதி வென்றது (நாரிமன்), பாவம் நீதி
No comments:
Post a Comment